கோலாலம்பூர், மார்ச்.25-
இன்று மார்ச் 25 ஆம் தேதி அரச மலேசிய போலீஸ் படையின் 218 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
நேரம் காலம் பார்க்காமல், நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும், சட்டங்களை அமல்படுத்துவதற்கும், குற்றச்செயல்கள் அச்சுறுத்தலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் போலீஸ் படையினர் தங்களின் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றி வருகின்றனர்.
அந்த முன்னணி வீரர்களுக்கு தமது வாழ்த்துகள் உரித்தாகுக என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூலில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.