கூலாய், மார்ச்.25-
ஜோகூரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 15 வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 23 ஆவது கிலோ மீட்டரில் கூலாய் அருகில் நிகழ்ந்தது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி தான் செங் லீ தெரிவித்தார்.