பிரேசிலை மிக எளிதாக வீழ்த்தியது அர்ஜெண்டினா

புயேனோஸ் ஏர்ஸ், மார்ச்.26-

தென் அமெரிக்க மண்டலதிற்கான உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவிடம் தோல்வி கண்டது. எனினும்  டோரிவால் ஜூனியரின் அணி அதிர்ஷ்டவசமாக பேரளவிலான கோல் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்திக்கவில்லை. 
 
பிரேசில் அண்மையில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜெண்டினாவுடனான ஆட்டத்தில், நான்காவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் அவ்வணிக்கான முதல் கோலை அடித்தார்.  லியோனல் மெஸ்ஸி மற்றும் லாட்டாரோ மார்டினெஸ் ஆகியோர் இல்லாமல், அர்ஜெண்டினா மிகச் சிறப்பாகவே விளையாடியது. தங்கள் சொந்த ஆதரவாளர்களுக்கு முன்னால் அடுத்த கோல் புகுத்த அது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. 
 
12வது நிமிடத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாவது கோலைப் போட்டார். ஆனால் அர்ஜெண்டினாவின் டிஃபெண்டர் கிறிஸ்டியன் ரொமெரோவின் தவறினால் 26வது நிமிடத்தில் மேதியஸ் குன்ஹா கோல் மூலம் பிரேசில் ஒரு கோலைப் பெற்றது. 37வது நிமிடத்தில் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர், அடுத்து கியுலியானோ சிமியோனே வாயிலாக மேலும் இரு கோல்களைப் போட்டு இறுதியில் 4-1 என்ற கோல்களில் அர்ஜெண்டினா வாகை சூடியது.  
 
 
மற்றோர் ஆட்டத்தில் உருகுவேயும் பொலிவியாவும் கோலின்றி சமநிலை கண்டதால் அர்ஜெண்டினா உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்திற்கான தனது இடத்தை உறுதிச் செய்தது.  அதன் மூலம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள அடுத்தாண்டு நடைபெறும் அப்பிரசித்தி பெற்றப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் தென் அமெரிக்க நாடு என்ற பெருமையையும் பெற்றது. 

WATCH OUR LATEST NEWS