ஷா ஆலாம், மார்ச்.26-
மலேசியாவில் முஸ்லிம் அல்லாத ஒருவர், நாட்டின் பிரதமராக வருவது தொடர்பான பரிந்துரை பொருத்தமற்றது என்று பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுஃல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசிலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் ஆகும். அந்த அதிகாரப்பூர்வ மதத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்பது பொருத்தமானதாகும்.
இதற்கு மேலாக நாட்டின் இஸ்லாமிய சமயத்தின் தலைவர் என்ற முறையில் மாமன்னர் உட்பட சமய அம்சங்கள் பொருந்திய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பிரதமர் ஓர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும் என்று வான் சைபுஃல் குறிப்பிட்டார்.