அலோர் ஸ்டார், மார்ச்.26-
வரும் ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக வரும் மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கெடா மாநில மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஹரிராயா பெருநாளை வரவேற்கும் வகையில் இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தவிர, கெடா மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஹரிராயா போனஸ் தொகையாக தலா ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுவதாக சனூசி நோர் அறிவித்துள்ளார்.