அஜித் பட தயாரிப்பாளருடன் இணைந்த டிராகன் படப் புகழ் பிரதீப்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது. 

அண்மையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்திலும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார் பிரதீப். இந்த படம் கொடுத்த வரவேற்புக்கு பின் படக்குழுவினரை நேரில் அழைத்து தளபதி விஜய், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் PR04 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ, சரத்குமார் என பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இது கீர்த்தீஸ்வரனின் முதல் படமாகும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படம். இதற்கு முன்ன அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தை அது தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

WATCH OUR LATEST NEWS