இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு: விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு

கெமாமான், மார்ச்.27-

திரெங்கானு, கெமாமானில் இரண்டு மாணவிகளுடன் பாலியல் தொடர்பு கொண்டதுடன், தனது காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ள சில ஆபாசச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக தொழில் திறன் பயிற்சி மையம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவர் இன்று கெமாமான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

38 வயது அஹ்மாட் ஷாஹீர் ஷாரிபுஃடின் என்ற அந்த விரிவுரையாளருக்கு எதிராக மொத்தம் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் கெமாசிக்கில் உள்ள மெஸ்ரா மால் கார் நிறுத்தும் இடம் மற்றும் கிஜாலில் உள்ள அவானா ஹோட்டலில் 19 வயது நிரம்பிய இரண்டு மாணவிகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த விரிவுரையாளர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த விரிவுரையாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS