கோலாலம்பூர், மார்ச்.28-
ஹரிராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கு பலர், இன்று வெள்ளிக்கிழமை முதல் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இன்று மார்ச் 28 ஆம் தேதி முதல் நாளை 29 ஆம் தேதி வரை பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ், கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலை, கிழக்குக் கரையோர நெடுஞ்சாலைகளான LPT1 மற்றும் LPT 2 இல் இன்று காலையில் போக்குரத்து சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.