மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கம் – மலேசியாவில் உணரப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.28-

மியன்மாரில் மத்தியப் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்தத்தின் தாக்கம், மேற்கு மலேசியாவில் பல பகுதிகளில் உணரப்பட்டது. அந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் மேற்கு மலேசியாவில் குறிப்பாக, பினாங்கு பட்டவொர்த்தில் அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம், மலேசியாவில் சுனாமிக்கான எச்சரிக்கையை விடுக்கப்படவில்லை என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS