ரொனால்டோவின் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் எம்பாப்பே

மாட்ரிட், மார்ச்.30-

லாஸ் பிளாங்கோஸுடனான தனது முதல் பருவத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கோல்களை சமன் செய்தது சிறப்பான சாதனை எனக் கூறியுள்ளார் ரியால் மாட்ரிட் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே. 
 
இன்று காலை லா லிகா போட்டியில் லெகானேஸுக்கு எதிராக எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்தார். அதன் வழி அவர் அனைத்து போட்டிகளிலும் 44 ஆட்டங்களில் 33 கோல்களை அடித்துள்ளார். 
 
 
2009-10 பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து வெளியேறிய பிறகு, அவரது ஹீராவாகத் திகழும் ரொனால்டோ பதிவு செய்த அதே கோல் எண்ணிக்கைதான் அதுவாகும். 
 
 
போர்ச்சுகல் நட்சத்திரமான ரொனால்டோ பின்னர் 450 கோல்களுடன் ரியல் மாட்ரிட்டின் ஆல் டைம் முன்னணி கோல் நாயகனாக வரலாறு படைத்தார். 
 
 
“இது மிகவும் சிறப்பாக ஒன்றாகும். ரொனால்டோவின் கோல் எண்ணிக்கையை சமன் செய்தது மிகப் பெரிய உந்துதல்” என்று எம்பாப்பே குறிப்பிட்டார். 
 
 
“ரியல் மாட்ரிட்டில் ரொனால்டோவின் செல்வாக்கு எவ்வளவு பெரியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நான் அவரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறேன். அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்குகிறார். அவர் நிறைய கோல்களை அடித்தவர், ஆனால் மிக முக்கியமாக, நாம் கிண்ணங்க!ஐ வெல்ல வேண்டும்,” என எம்பாப்பே மேலும் கூறினார். 

WATCH OUR LATEST NEWS