நடிகர் கார்த்தி அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகி பரபரப்பாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் அண்மையில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவதாகவும் கைதி 2 தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். அப்படி அவர் நடித்த படங்களின் 2ம் பாகத்தின் டீஸர் வெளியானது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் சர்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலரும் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. சர்தார் 2 படத்தின் டீஸர் பற்றி மக்கள் பேசிவர தற்போது கார்த்தியின் புதிய படம் பற்றி ஒரு தகவல் வலம் வருகிறது.
அதாவது நடிகர் கார்த்தியின் திரைப் பயணத்தில் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்துள்ள சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் புதிய படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.