ஜாலான் உலு யாம் சாலையில் நிலச்சரிவு: கவனம் தேவை

உலு சிலாங்கூர், ஏப்ரல்.01-

சிலாங்கூர், பத்தாங் காலி, ஜாலான் உலு யாம்- பத்துகேவ்ஸ் சாலையின் B23 என்ற இடத்தில் நிலச்சரிவு சம்பவம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.

அந்த சாலையைப் பயன்படுத்துகின்ற வாகனமோட்டிகள், மிகுந்த கவனமாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விரும்பத் தகாத சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க அறிவிப்புப் பலகையைப் பின்பற்றுமாறு பத்தாங் காலி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சைபுஃடின் ஷாபி முகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.

சாலையில் குவிந்து கிடக்கி மண்ணை அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளை தீயணைப்பு, மீட்புப்படையினர் உட்பட அரசாங்க ஏஜென்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS