பாலிங், ஏப்ரல்.01-
வீடொன்றின் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு நாய்கள், கடித்துத் குதறியதில் இருவர் காயமுற்றனர். இச்சம்பவம் இன்று காலையில் கெடா, பாலிங், தாமான் டேசா பிடாரா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
நாய் உரிமையாளரின் வீட்டிலிருந்து தப்பிய அந்த இரண்டு நாய்கள், சாலையில் கடந்து சென்றவர்களைக் கடித்து குதறியதாக கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஸாகாரியா தெரிவித்தார்.
அந்த இரண்டு நாய்களை அங்கிருந்து விரட்டுவதற்குப் பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து இறுதியில் உரிமையாளர் அந்த இரு நாய்களையும் கட்டுப்படுத்தி, இழுத்துச் சென்றதாக அவர் மேலும் கூறினார்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இது குறித்து ஊராட்சி மன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.