குஜராத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 18 பேர் பலி

ஆமதாபாத், ஏப்ரல்.01-

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் தீசா நகர் தொழிற்பேட்டையில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

தரைமட்டமான பட்டாசு ஆலையில் இருந்து படுகாயங்களுடன் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS