ஈபிஎல் பட்டத்தை வெல்வதே தற்போதைய இலக்கு

லிவர்புல், ஏப்ரல்.01-

ட்ரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட் ரியால் மாட்ரிட் அணிக்குச் செல்லும் நிலையை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. எனினும் அது தற்போதைக்கு முக்கியமான விஷயம் அல்ல. இங்கிலீஷ் பிரீமியர் லீக்  பட்டத்திற்கான சவாலில் லிவர்பூல் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே தலையாய இலக்கு என அவ்வணி நிர்வாகி ஆர்னே ஸ்லாட் தெரிவித்திருக்கிறார். 
 
அந்த இங்கிலாந்து தற்காப்பு விளையாட்டாளர் பெர்னாபியூவில் இலவசமாக இணையலாம் என நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த 26 வயதான ஆட்டக்காரருக்கும் ஸ்பெயின் ஜாம்பவானான ரியாலுக்கும் இடையேயான பேச்சுக்கள் முன்னேற்றகரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
முகமட் சலா மற்றும் விர்ஜில் வான் டிஜ்க் உள்ளிட்ட மூன்று முக்கிய வீரர்களில் ஒருவராக அலெக்சாண்டர்-அர்னால்டின் ஒப்பந்தம் இப்பருவத்துடன் முடிவடைகிறது. 
 
கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு கிளப்புகளுடன் ஒப்பந்தம் தொடர்பில் பேச அம்மூன்று வீரர்களுக்கும் உரிமையுண்டு. இந்நிலையில் பிரீமியர் லீக்கை வெல்வதற்கான முக்கியத் தேர்வாக ஸ்லாட் அணி, அனைத்துலக ஓய்வுக்குப் பிறகு வரும் வியாழன் அன்று அண்டை நாடான எவர்டனுடன் மோதுகிறது. 
 
 
“துரதிர்ஷ்டவசமாக, அர்னால்ட் காயமடைந்துள்ளார், இல்லையெனில் இங்கிலாந்து அணியுடனான அவரது சிறந்த ஆட்டத்தை மக்கள் பேசுவார்கள்” என்று லிவர்பூல் நிர்வாகி அலெக்சாண்டர்-அர்னால்டைக் குறிப்பிட்டு பேசினார்.

WATCH OUR LATEST NEWS