கோலாலம்பூர், ஏப்ரல்.01-
கோரத் தீச்சம்பவத்தில் காயமுற்ற 112 பேரில் 63 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய 49 பேர், சுபாங் ஜெயா, பெர்சியாரான் ஹார்மோனி யுஎஸ்ஜே 27 புத்ரா ஹைட்ஸ், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடலில் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு அவசர சிகிச்சையாக சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவில் வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடும் தீக்காயங்களுக்கு ஆளானவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் கோவிலிலேயே தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இச்சம்பவத்தில் 82 பேர் எவ்வித காயமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு சிலாங்கூர் மாநில அரசு இலாகாக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.