கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் உச்ச நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது அவர் நடித்த கூலி திரைப்படமும் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து, ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் பற்றி பாரதிராஜா அவருடைய 70ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய விஷயம் திடீரென பரவலாகப் பேசப்படுகிறது.
“நான் இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக வரவில்லை. ஒரு சூப்பர் மனிதரான ரஜினிக்காக வந்திருக்கிறேன். ரஜினிகாந்த் ஒரு சிறுவனைக்கூட தரக்குறைவாக பேசியதே இல்லை. கோபத்தில் கூட அடுத்தவரைக் காயப்படுத்தமாட்டார். ரஜினிக்கும் எனக்கும் பல முரண்பாடுகள் வந்திருகின்றன. பலமுறை அவரை நான் தாக்கிப் பேசியிருக்கிறேன். ஆனால், இது எதையும் அவர் மனதில் வைத்து கொண்டது இல்லை” என்று பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.