எலோன் மஸ்க் உலகிலேயே பெரும் பணக்காரர்

மோஸ்கோவ், ஏப்ரல்.02-

அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க், 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின்  வருடாந்திர பட்டியலை மேற்கோள் காட்டி, ஸ்புட்னிக்/ஆர்ஐஏ நோவோஸ்டி அத்தகவலை வெளியிட்டுள்ளது. மஸ்கின் நிகர மதிப்பு US$342 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


அவர் 2023 இல் அந்த நிலையை இழக்கும் முன் 2022 இல் முதல் இடத்தைப் பிடித்தார். 2024 இல், மஸ்க் தனது செல்வத்தை 147 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தார்.  மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது சொத்து மதிப்பில் மேலும் 39 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மொத்த மதிப்பு 216 பில்லியன் டாலராகும். 


ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசானின் நிறுவனர், ஜெஃப் பெசோஸ், 215 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.  நான்காவது இடத்தை மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் இணை நிறுவனர் லாரி எலிசன் 192 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பெற்றுள்ளார். 
இதற்கிடையில், Moet Hennessy Louis Vuitton (LVMH) குழுமத்தின் தலைவர் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பம் US$178 பில்லியன் மதிப்பீட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. 


உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 247 பேர் அதிகரித்து 3,028 ஆகவும், முதன்முறையாக 3,000ஐ தாண்டியதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது 2024 உடன் ஒப்பிடும்போது 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடுதலாகும்.  பட்டியலில் உள்ள பில்லியனர்களின் சராசரி சொத்து மதிப்பும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அமெரிக்காவில் 902 பில்லியனர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து சீனா (ஹாங்காங் உட்பட) 516, மற்றும் இந்தியா 205 என இருக்கின்றனர். பட்டியலில் உள்ள தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மூன்று நாடுகளின் நாட்டினராக உள்ளனர். 

WATCH OUR LATEST NEWS