சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், அந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை மதிப்பிடுவதற்கு ஒரு குழுவை அமைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தளமாக செயல்பட முடியும் என்று பெரிகாத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கூறினார்.
இங்குள்ள சில பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த பேரழிவை எதிர்கொள்ளும் அவர்களின் நிலையை கவனிக்கக் கூடிய ஒரு குழுவை அமைக்கக் கூறியதாக அவர் தெரிவித்தார். இழப்பீடு பெறவும், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவும் இஃது அவர்களுக்கு உதவும். சில பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் உள்ள வீடுகளில் வாடகைக்குக் குடியிருந்தாலும், எதிர்கொள்ளும் பேரழிவு சூழ்நிலையை மிகவும் கடினமாக்குகிறது என்றார்.
இதுபோன்ற பேரழிவுகள் பாதிக்கப்பட்டவர்களின் மனதை இரணமாக்கும். எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவ அக்குழுவைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று ஹம்ஸா கூறினார். இதற்கிடையில், அரசாங்கமும் தொடர்புடைய நிறுவனங்களும் சற்று முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஹம்ஸா அறிவுறுத்தினார்.