சுபாங் ஜெயா, ஏப்ரல்.02-
நேற்று, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பு காரணமாக தற்காலிகமாக எரிவாயு குழாய்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து காஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் எரிவாயு விநியோகக் கட்டுப்பாட்டை அமல்படுத்துகிறது. ஷா ஆலாம், குண்டாங், பெட்டாலிங் ஜெயா, தெலுக் பங்ளிமா காராங், கிள்ளான் துறைமுகம், புலாவ் இண்டா ஆகியவற்றுடன் இன்னும் சில பகுதிகளில் உள்ள காஸ் மலேசியா வாடிக்கையாளர்களை இந்த சம்பவம் பாதித்துள்ளது என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முன்னதாகவே இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், சூழ்நிலை குறித்த சமீபத்திய தகவல்களை தொடர்ந்து வழங்கும் என்றும் அது கூறியது.