மீண்டும் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் கார்த்தி

நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. மேலும் கார்த்தி அண்மையிக் அவரது அண்ணன் சூர்யாவின் கங்குவா படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் நானி அடுத்து நடித்து வரும் ஹிட் 3 படத்தில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹிட் 4 படத்தில் கார்த்தி முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அதனால் ஹிட் 3ல் அவரை அறிமுகப்படுத்தும் வகையில் சில காட்சிகளில் மட்டும் அவர் நடிக்க போகிறார் எனக் கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS