கோலாலம்பூர், ஏப்ரல்.03-
இன்று வெளியிடப்பட்ட பிஃபாஃ உலகத் தரவரிசையில் மலேசியா ஒரு படி முன்னேறி, 132 வது இடத்திலிருந்து 131 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா நேபாளத்தை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்த சிறிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
மலேசிய கால்பந்து சங்கம் பேஸ்புக் பதிவில், “மலேசியா உலகில் 131 வது இடத்தில் உள்ளது. 132 ல் இருந்து ஓரிடம் ஏறி அவ்விடத்தைப் பிடித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது. அடுத்த பிஃபாஃ உலகத் தர வரிசைப் பட்டியல் இவ்வாண்டு ஜூலை பத்தாம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
உருகுவே (1-0), பிரேசில் (4-1) ஆகிய அணிகளுக்கு எதிரான வலுவான வெற்றிகளுக்குப் பிறகு, உலகசு சாம்பியனான அர்ஜென்டினா முதலிடத்தில் உள்ளது.
குரோஷியாவுக்கு எதிராக தடுமாறி மூன்றாவது இடத்துக்குச் சென்ற பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து நான்காவது இடத்திலும், பிரேசில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.