விஜயவாடா, ஏப்ரல்.03-
ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டை உண்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கோழி சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. பெற்றோர் முதலில் சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மார்ச் 4ம் தேதி பறவைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை, மார்ச் 16ம் தேதி மரணமடைந்தது. மருத்துவ பரிசோதனையில் குழந்தை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருந்ததை உறுதிச் செய்தது.