இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

மிரி, ஏப்ரல்.03-

சரவாக், ஜாலான் பிந்துலு – மிரி சாலையின் 76ஆவது கிலோ மீட்டரில் கொள்கலன் லோரியும், உதிலிதி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர்.

இன்று காலை 8.20 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 36 வயதுடைய லோரி உதவியாளர் மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

பெரோடுவா அருஸ் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவரும், லோரி ஓட்டுநரும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் லோரியின் இடிபாடுகளில் சிக்கி, உதவியாளர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS