இந்தியன் 3 படம் வெளிவருமா?

இயக்குநர் ஷங்கர் – நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியடைந்த படம் இந்தியன். கிட்டதட்ட 28 வருடங்களுக்கு பிறகு கடந்தாண்டு இந்தியன் 2 வெளிவந்தது. இப்படத்தில் கமலுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் என பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. வசூலும் எதிர்பார்த்தபடி இல்லை.

இந்த நிலையில், தற்போது இந்தியன் 3 குறித்து அண்மைய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் 3 படத்திற்காக வேலைகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளார்களாம்.

இப்படத்திற்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக விரைவில் கமல்ஹாசனைத் தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக இந்தியன் 3 வெள்ளித்திரையில் தான் வெளிவரும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS