கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 8 பேர் பலி

கந்த்வா, ஏப்ரல்.04-

மத்திய பிரதேசத்தில் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 8 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கந்த்வா மாவட்டத்தில் பண்டிகையொன்றைக் கொண்டாட அக்கிராம மக்கள் ஆயத்தமாகி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, சுவாமி சிலைகளை நீரில் கரைப்பதற்காக, அங்குள்ள 150 ஆண்டு கால பழமையான கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

முதலில் கிணற்றுக்குள் இறங்கிய நபர் விஷ வாயு தாக்கி மயக்கமடைந்த நிலையில், அவரை மீட்கும் முயற்சியில், ஒன்றன் பின் ஒன்றாக 7 பேர் உள்ளே சென்றனர். ஆனால், விஷவாயு தாக்கியதில், 8 பேரும் கிணற்றின் உள்ளேயே உயிரிழந்தனர்.

மரணமடைந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS