ஆயர் கெரோ, ஏப்ரல்.04-
மலாக்கா, ஆயர் கெரோ, தாமான் செங் உத்தாமாவில் நபர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கியக் குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4,300 ரிங்கிட் அபராதம் விதித்தது.
27 வயது அரிப் இஸ்ஸாட் ஷாஹாருடின் என்ற அந்த வர்த்தகர் கடந்த மார்ச் 27 ஆம் தேதி 52 வயதுடைய யுஸ்ரி ஓமார் என்பவரைத் தலைக்கவசத்தால் தாக்கிக் காயம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது, அவர் சாலையிலேயே விழுந்த காட்சி ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டார்.