சிறார் ஆபாசப் பொருட்களை வைத்திருந்த நால்வர் கைது

கோலாலம்பூர், ஏப்ரல்.04-

சிறார் ஆபாசப் பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு அரசாங்கப் பணியாளர் உட்பட நால்வரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை 6 நாடுகளில் நடைபெற்ற சைபர் கார்டியன் சோதனை நடவடிக்கையின் வழி மலேசியாவில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத்துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

26 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் காஜாங், அம்பாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நால்வர் கைது செய்யப்பட்டது மூலம் சிறார் ஆபாசச் சாதனங்கள் என வகைப்படுத்தப்பட்ட சுமார் 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு அதிமான மதிப்பைப் கொண்ட பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக துணை ஐஜிபி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS