ஷா ஆலாம், ஏப்ரல்.05-
நாளை ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்று நடத்தவிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான மடானி ஹரி ராயா பொது உபசரிப்பு ரத்து செய்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
பொது உபசரிப்பை ரத்து செய்வதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுஃடின் இட்ரிஸ் ஷா மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஹரி ராயா பொது உபசரிப்ப ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.