வீட்டு வன்முறைச் சம்பவம் – மளிகைக் கடை உரிமையாளருக்குத் தடுப்புக் காவல்

கோலபிலா, ஏப்ரல்.05-

வீட்டு வன்முறைச் சம்பவத்தில் தனது மனைவியைக் கடித்து, காயப்படுத்தியதாகக் கூறப்படும் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் முதல் தேதி நெகிரி செம்பிலான், பெக்கான் கோலபிலாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்ப மாது போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 32 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்ததாக கோலபிலா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் முஸ்தாபா ஹூசேன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர், கோலபிலா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS