ஆர்செனலைத் திக்கு முக்காட வைத்தது எவர்டன்

இங்கிலிஷ் பிரீமியர் லீக் ஆட்டமொன்றில் ஆர்செனல் 1-1 என்ற கோல் கணக்கில் எவர்டனுடன் சமநிலை கண்டது. அதன் வழி புள்ளிப் பட்டியலில் முன்னணி வகிக்கும் லிவர்பூலுக்கு மேலும் வசதியை அது ஏற்படுத்தித் தந்துள்ளது.  
 
புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆர்செனல், இதுவரை 31 ஆட்டங்களின் வாயிலாக 62 புள்ளிகளைச் சேகரித்துள்ளது. லிவர்பூலை விட அது 11 புள்ளிகள் பின் தங்கியிருக்கிறது. ஓராட்டம் கைவசம் உள்ள லிவர்பூல் அடுத்து புஃல்ஹாமைச் சந்திக்கிறது. 
 
இதனிடையே ஆர்செனலுடன் சமநிலை கண்ட எவர்டன் இதுவரை  31 ஆட்டங்களில் இருந்து 35 புள்ளிகளை ஈட்டியுள்ளது. அது தற்போது 14 இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

WATCH OUR LATEST NEWS