கோத்தா கினபாலு, ஏப்ரல். 05-
மலையடிவாரத்தில் உள்ள மரம் ஒன்றில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
சபா, கோத்தா கினபாலு, கம்போங் கிபாகு, என்ற இடத்தில் ஆடவர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்தனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் கழுத்தில் காணப்பட்ட கயிறு, அறுக்கப்பட்டு, ஏணியின் மூலம் அவரின் உடல் இறக்கப்பட்டதாக கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத் தலைவர் Ordine Gilu தெரிவித்தார்.