டிஎன்பி: 100 விழுக்காடு தள்ளுபடி

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் மார்ச் 2025 மாதத்திற்கானக் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு 100 விழுக்காடு தள்ளுபடியை வழங்குகிறது. இந்தத் தொகை ஏப்ரல் 2025 மாத மின்சாரக் கட்டணத்தில் வரவு வைக்கப்படும். டிஎன்பி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் சிஎஸ்ஆர் வாயிலாக, இந்த உதவி வழங்கப்படுவதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மின்சாரம் தடைபட்ட வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கானக் கட்டணங்களை வசூலிக்காமல் டிஎன்பி தனது உதவியை வழங்குகிறது. மேலும், தற்போதைய மாதாந்திரக் கட்டணங்களுக்கு தாமதக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது. அதே சமயம், பாதிக்கப்பட்ட வீடுகளின் மின்சார அமைப்பு நல்ல நிலையிலும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்த, வயரிங் பரிசோதனைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அதிகாரிகள், பதிவு செய்யப்பட்ட குத்தகையாளர்களுடன் டிஎன்பி ஒத்துழைக்கும். பாதிக்கப்பட்ட பயனர்கள் மின்சாரம் தொடர்பான சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி முதல் காவல் நிலையம் அருகில் டிஎன்பி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS