இவ்வாண்டுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றார் ஷெரின் சாம்சன் வல்லபாய்

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

அமெரிக்கா புளோரிடாவில் நடைபெற்ற Embry-Riddle Running Elements Classic 2025 போட்டியில் மலேசியாவின் ஷெரின் சாம்சன் வல்லபாய் மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று இந்த ஆண்டின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். 26 வயதான அவர், 53.72 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கத்தை வென்றதாக மலேசிய தடகள சம்மேளனம் இன்று முகநூலில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS