ஜோகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஜோகூர் பாரு, ஏப்ரல்.06-

ஜொகூர் பாருவிலும் சபாவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. பத்து பாஹாட்டில் மாலை 4 மணி நிலவரப்படி 94 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 88 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கம்போங் பஹாரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஶ்ரீ காடிங் இடைநிலைப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை குழு தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

சபாவில், கினபாதாஙான் பகுதியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 138 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புக்கிட் காராம் தேசியப் பள்ளியில் உள்ள தற்காலிக துயர் துடைப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக காலை 8 மணி நிலவரப்படி 29 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் அங்கு தங்கியிருந்தனர். தொடர் மழையாலும் ஆற்று நீர் ஆபத்தான அளவை எட்டியதாலும், கினபாதாஙான் ஏப்ரல் 2-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS