விவசாயிகளின் நலனுக்காக 90 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

விவசாயிகளின் நலனுக்காக விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு 90 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை பெர்னாஸ் நிறுவனம் முழுமையாக வழங்கியுள்ளது. இந்த நிதி பொதுமக்களின் பணம் இல்லை என்றும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என்றும் பெர்னாஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிதியானது இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 மில்லியன் ரிங்கிட் படிப்படியாகவும், இறுதிக்கட்டமாக 15 மில்லியன் ரிங்கிட் கடந்த மார்ச் 5-ம் தேதியும் வழங்கப்பட்டது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் 30 மில்லியன் ரிங்கிட் நிதியும் மார்ச் 28-ம் தேதி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பெர்னாஸ் உறுதி பூண்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS