சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-
புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கு உதவ தேசியப் பதிவுத் துறையின் மெகார் எனப்படும் நடமாடும் சேவை மையம் அமைக்கப்பட்டது. புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தற்காலிகத் தங்குமிட மையத்தில் நான்கு நாட்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அதன் உதவி இயக்குநர் நுர்ஸலிஸா கார்த்திகா அப்துல்லா கூறினார்.
இந்த முயற்சியின் வாயிலாக அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், மைக்கிட் விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனடியாகப் பெற முடிந்தது. இந்தப் பேரிடர் காரணமாக பலர் அதிர்ச்சியில் இருந்த போதும், ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டதால் சிகிச்சை, பிள்ளைகளின் கல்வி சமூகநல உதவிகளைப் பெறுவது எளிதாக இருந்தது என அவர் மேலும் சொன்னார்.