சுபாங் ஜெயா, ஏப்ரல். 06-
புத்ரா ஹைட்ஸ் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ உயர்கல்வி நிறுவனங்கள் இலகுவான முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு இலங்கலை வாயிலாக கூடுதல் வகுப்புகள் நடத்தவும் உயர்க்கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ புரோப்ஃ. டாக்டர் அஸ்லிண்டா அஸ்மான் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி அமைச்சும் தொடர்புடைய இதர நிறுவனங்கள் வாயிலாகவும் தலா 2,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 70 மாணவர்கள் உதவி பெற்றுள்ளனர். பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். மடிக்கணினி போன்ற கருவிகளை இழந்த மாணவர்களுக்கு உதவ இலக்கவியல் அமைச்சுடன் பேசவுள்ளதாகவும் டாக்டர் அஸ்லிண்டா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆதரவும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.