தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் குஷ்பூ. கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த அவர் தற்போது அரசியல், சீரியல் மற்றும் பட தயாரிப்பிலும் பரபரப்பாக இருக்கிறார். இவர் இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா இயக்குநர் மணி ரத்னத்திடம் பணிபுரிந்து வருகிறாராம்.
இந்த நிலையில், மூத்த மகள் அவந்திகாவும் சினிமாவில் நுழையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்றும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை அவர் கதாநாயகியாக நுழைந்தால், தனது அம்மா குஷ்பூ போல முன்னணி நடிகையாக வலம் வருவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.