புஃல்ஹாமிடம் வீழ்ந்தது லிவர்புல்

லண்டன், ஏப்ரல்.07-

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 26 ஆட்டங்களில் தோற்காத சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது லிவர்பூல். புஃல்ஹாமுடனான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து அவ்வணி அந்நிலையைச் சந்தித்துள்ளது. எனவே முன்னணி கிளப் என்ற வகையில் லிவர்புல் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று நிர்வாகி ஆர்னே ஸ்லாட் கூறியுள்ளார். 
 
இன்னும் ஏழு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் அர்செனலை விட 11 புள்ளிகள் வித்தியாசத்தில் லிவர்பூல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது இப்பருவத்திற்கான பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கி வருகிறது என்றே கூறலாம்.   

லிவர்புல் அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹாமைச் சந்திக்கவிருக்கிறது. அவ்வாட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ஆட்டக்காரர்கள் அனைவரும் 90 நிமிடங்களுக்கும் முழு கவனத்துடன் ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டியது மிக அவசியம் என ஸ்லாட் குறிப்பிட்டார்.  
 
 

WATCH OUR LATEST NEWS