இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

ஜகார்த்தா, ஏப்ரல்.08-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு ஆச்சேவில் இன்று அதிகாலையில் அந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக இருந்தது. எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை என அந்நாட்டினந வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு ரிக்டரில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவானதாகவும், பின்னர் அது 5.9 ஆக இருந்ததாகவும் முன்னதாகக் கூறப்பட்டது. பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியா நில அதிர்வுகள் அதிகம் பதிவாகும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே பூகம்பங்கள் ஏற்படுகிறது. அந்நாட்டில்127 எரிமலைகள் உள்ளன. தாய்லாந்திலும், மியான்மாரிலும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இச்சூழ்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS