ஜோகூர் பாரு, ஏப்ரல்.08-
கார் ஒன்று திடீரென்று தீப்பற்றிக் கொண்டதில் காரைச் செலுத்திய இளைஞர் ஒருவர், உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் நேற்று இரவு 9.15 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் பெட்ரோன் பிளேந்தோங் அருகில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மீட்புப்படையினர், ஹொண்டா சிட்டி காரில் ஏற்பட்டத் தீயை அணைத்ததுடன், தீக்காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர் மீட்கப்பட்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய செயலாக்க ஒருங்கிணைப்பாளர் ராஃபி அஹ்மாட் சாரேங் தெரிவித்தார்.