குவாந்தான், ஏப்ரல்.08-
போலீஸ்காரர் ஒருவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. PGA எனப்படும் காலாட் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய அந்த போலீஸ்காரர், குவாந்தான், கேம் காலிங், போலீஸ் குடியிருப்புப் பகுதியிக் இறந்து கிடந்தது குறித்து நேற்று இரவு 11 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த போலீஸ்காரர் மூன்று, நான்கு தினங்களுக்கு முன்பு இறந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தனியொரு நபராக அந்த வீட்டில் வசித்து வந்த அந்த போலீஸ்காரர், பிரதான அறையில் சோபாஃவில் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்ததாகத் தெரியவந்தது என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு தெரிவித்தார்.