24 விழுக்காடு வரி விதிப்பு, மலேசியாவின் நிலை என்ன? திங்கட்கிழமை முடிவு செய்யப்படும்

புத்ராஜெயா, ஏப்ரல்.09-

மலேசியாவிற்கு எதிராக 24 விழுக்காடு வரியை அறிவித்து இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து மலேசியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.

இந்த 24 விழுக்காடு வரி விதிப்பு தொடர்பாக அரசாங்கம் சில முடிவுகளை அறிவிக்கவிருப்பதாக டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் ஆசியான் அமைச்சர்களுடனான கூட்டத்திற்கு பின்னர் சில முடிவுகளை அரசாங்கம் அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆசியான் வர்த்தக அமைச்சர்களுக்கான அந்த கூட்டத்திற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாப்ஃருல் பின் தெங்கு அப்துல் அஸிஸ் தலைமையேற்பார் என்று டத்தோ பாஃமி கூறினார்.

WATCH OUR LATEST NEWS