மலேசியரைத் தேடி வருகிறது தாய்லாந்து போலீசார்

சொங்க்லா, ஏப்ரல்.09-

தாய்லாந்து, ஹாட் யாயில் உள்ள பிளாஸா ஹாட் யாய் பேரங்காடியில் நகைக்கடை ஒன்றில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைத்க் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த மலேசியப் பிரஜை என்று நம்பப்படும் 61 வயது நபரை தாய்லாந்து போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று காலை 11.50 மணியளவில் அந்த நகைக்கடையில் வாடிக்கையாளரைப் போல் பாவனை செய்த அந்த மலேசியப் பிரஜை, திடீரென்று துப்பாக்கியைக் காட்டி, பெருவாரியான நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாத ஹாட் யாய் மாவட்ட போலீஸ் தலைவர் பியாவாட் சாலெர்ம்சி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், துப்பாக்கி முனையில் நகைகளைக் கொள்ளையடிக்கும் காட்சி, நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS