11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்

கோத்தா பாரு, ஏப்ரல்.09-

காதல் வயப்பட்ட நிலையில் தனது 15 வயது உறவுக்காரப் பெண்ணைக் கர்ப்பிணியாக்கியதாக நம்பப்படும் 11 வயது சிறுவன், கைது செய்யப்பட்டுள்ளதாக கிளந்தான் போலீசார் இன்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கடந்த வாரம் போலீஸ் புகார் செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஏதுவாக அந்த 11 வயது சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் இன்று அம்பலப்படுத்தினார்.

கர்ப்பிணியாக்கப்பட்ட பெண், தற்போது சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உறவுக்காரப் பிள்ளைகள் மத்தியில் தகாத உறவுச் சம்பவங்கள் கிளந்தானில் அதிகரித்து வருவது அச்சமூட்டும் வகையில் உள்ளது என்று டத்தோ முகமட் யூசோப் தெரிவித்தார்.

வற்புறுத்தலின்றி இருவரின் விருப்பத்தின் பேரிலும் இத்தகையத் தகாத உறவுகள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் 206 ஆக பதிவு செய்யப்பட்ட இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைகள், கடந்த ஆண்டு 252 ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS