முழு அறிக்கை மே மாதம் தயாராகும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.11-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து சம்பவம் தொடர்பில் முழு அறிக்கை அடுத்த மாதம் மத்தியப் பகுதியில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் மோசமான வானிலையின் காரணமாக மண்ணாய்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த ஆய்வு பூர்த்தியானால் மட்டுமே உண்மை நிலவரத்தை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS