அபாயக் கட்டத்தில் ஐந்து இடங்கள்

கிள்ளான், ஏப்ரல்.11-

நேற்று இரவு முதல் பெய்து வரும் அடைமழையின் காரணமாக நீர் மட்டம் இரண்டு அடி வரை உயர்ந்ததைத் தொடர்ந்து
தாமான் ஸ்ரீ ஜெயா, ஜாலான் மேரு, கிள்ளான் உள்ளிட்ட இடங்களில் பத்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளம் தொடர்பில் இன்று விடியற்காலை 4.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு அதிகாலை 4.27 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறை தெரிவித்தது.

அப்பகுதியில் ஏற்பட்ட சுமார் இரண்டு அடி வெள்ளத்தில் பத்து வீடுகள் பாதிக்கப்பட்டன. எட்டு பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள வேளையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று செயலாக்க
அதிகாரியின் அறிக்கை கூறியது.

WATCH OUR LATEST NEWS