கைப்பேசிக்கு மின்னூட்டும் போது மின்சாரம் தாக்கியிருக்கலாம்

ஷா ஆலாம், ஏப்ரல்.12-

ஷா ஆலாம், செக்‌ஷன் 25, தாமான் ஆலாம் இண்டாவில் கட்டுமானப் பொருள்கள் வைத்திருக்கும் கிடங்கில் நேற்று மின்சாரம் தாக்கி வெள்ளத்தில் இறந்து கிடந்த இலங்கைப் பிரஜை, தனது கைப்பேசிக்கு மின்னூட்டும் போது, மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கிடங்கில் வெள்ளத்தின் மத்தியில் அந்த இலங்கைப் பிரஜை, தனது கைப்பேசிக்கு மின்னூட்ட முயற்சித்திருக்கிறார்.

அப்போது கைப்பேசியும், சார்ஜரும் தண்ணீரில் விழுந்து இருக்கலாம். அதனை எடுக்க முயற்சி செய்த போது அவரை மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த நபர் தனது நண்பருடன் அந்த கிடங்கில் தங்கியுள்ளார். சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அவரின் நண்பர் கிடங்கை விட்டு வெளியேறியிருக்கிறார். அப்போது, அவரின் நண்பர், கிடங்கில் கைப்பேசி மற்றும் சார்ஜருடன் காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS