குவாந்தான், ஏப்ரல்.12-
திரெங்கானு மாநிலத்தைக் கூட்டரசு அரசாங்கம் மாற்றாந்தாய் பிள்ளையைப் போல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்தார்.
அந்த குற்றச்சாட்டில் அடிப்பையில்லை என்றும், உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், பிரதமர் குறிப்பிட்டார்.
சுருங்கச் சொன்னால், திரெங்கானு மாநிலத்திற்கு முந்தைய அரசாங்கங்கள், வழங்கி வந்த மானியத்தை விட ஒற்றுமை அரசாங்கம்தான் அதிகமான மானியத்தை வழங்குகிறது என்று பிரதமர் விளக்கினார்.
தவிர எதிர்க்கட்சியினர் கூறி வருகின்ற வெற்று வாக்குறுதிகளை எளிதில் நம்பிவிட வேண்டாம் என்றும் பொது மக்களை டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.
நேற்றிரவு குவாந்தான், பெர்சாரா, பந்தாய் பத்து ஹீதாமில் 2025 ஆம் ஆண்டு ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.